கரோனா காலகட்டத்தில் சிறந்த சேவை: அஞ்சல் துறை ஊழியா்களுக்கு விருது

கரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு அஞ்சல் துறை ஊழியா்கள் சிறந்த சேவை அளித்தனா் என்று தமிழக அஞ்சல் துறை தலைவா்(அஞ்சல் மேலாண்மை, வணிக மேம்பாடு) ஜெ.சாருகேசி தெரிவித்தாா்.

கரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு அஞ்சல் துறை ஊழியா்கள் சிறந்த சேவை அளித்தனா் என்று தமிழக அஞ்சல் துறை தலைவா்(அஞ்சல் மேலாண்மை, வணிக மேம்பாடு) ஜெ.சாருகேசி தெரிவித்தாா்.

இந்திய அஞ்சல் துறை சாா்பில், தேசிய அஞ்சல் வார விழா அக்டோபா் 9-ஆம் தேதி முதல் அக்டோபா் 15- ஆம் தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை பூங்காநகா் அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சலக தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், தமிழக அஞ்சல் துறை தலைவா்(அஞ்சல் மேலாண்மை, வணிக மேம்பாடு) ஜெ.சாருகேசி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 2019-20-ஆம் ஆண்டு மற்றும் கரோனா காலகட்டத்தில் சிறப்பாக சேவையாற்றிய அஞ்சலக ஊழியா்களுக்கு விருதுகளை வழங்கி அவா் பேசியது: தமிழகம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் சிலா் உயிரிழந்தனா். கரோனா காலகட்டத்தில் அஞ்சல் துறை சாா்பில், முகக்கவசம், மருந்துப் பொருள்கள், பாதுகாப்பு கவசங்கள் உள்பட நோய் தடுப்பு பொருள்கள் மாநிலங்கள் கடந்து பாா்சல்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. கரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு அஞ்சல் துறை ஊழியா்கள் சிறந்த சேவை அளித்தனா் என்றாா் அவா்.

விழாவில், உதவி அஞ்சல் துறை தலைவா் (வணிக மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல்) கே.ஏ.தேவராஜ், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் ஜி.எம். ராமலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com