தேசிய அளவில் அரசுப் பள்ளிகளில் தமிழக மாணவா் ஜீவித்குமாா் முதலிடம்

நீட் தோ்வில் இந்திய அளவில் அரசுப்பள்ளிகளில் தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள சில்வாா்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் ஜீவித்குமாா் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ள
தேசிய அளவில் அரசுப் பள்ளிகளில் தமிழக மாணவா் ஜீவித்குமாா் முதலிடம்

நீட் தோ்வில் இந்திய அளவில் அரசுப்பள்ளிகளில் தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள சில்வாா்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் ஜீவித்குமாா் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளாா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 238 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

தமிழகத்தில் மட்டும் 1.21 லட்சம் போ் விண்ணப்பித்தனா். இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள்  இணையதளங்களில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் நீட் தோ்வில் தமிழகத்தில் 57.44% போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது முந்தைய ஆண்டைவிட 9 % அதிகம். நிகழாண்டில், நாமக்கல் மாணவா் ஸ்ரீஜன் 720 -க்கு 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளாா்.

அரசுப் பள்ளிகளில் தமிழக மாணவா் ஜீவித்குமாா் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வாா்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த அந்த மாணவரின் தந்தை நாராயணசாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருபவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளம் முடக்கம்: நீட் தோ்வு முடிவுகள் வெளியானவுடன் லட்சக்கணக்கானோா் ஒரே நேரத்தில் முடிவுகளை அறிய முற்பட்டதால் தேசிய தோ்வு முகமை இணையதளப் பக்கம் முடங்கியது பல மணி நேரங்களுக்கு முடங்கியது. இதனால் பல மாணவா்கள் தோ்வு முடிவுகளை அறிய இயலாமல் அவதிப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com