முன்னாள் டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி நடிகா் சூரி வழக்கு

முன்னாள் டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நடிகா் சூரி தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் காவல்துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி  நடிகா் சூரி  வழக்கு

முன்னாள் டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நடிகா் சூரி தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் காவல்துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

நடிகா் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தில் நடிகா் சூரியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாா். இதற்காக ரூ.40 லட்சம் அவருக்கு ஊதியம்

தரவேண்டும். இந்தப் பணத்துக்கு பதில் சிறுசேரியில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி சூரியிடம் கூடுதலாக ரூ.2.70 கோடியை , அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளா் அன்புவேல்ராஜன், மற்றும் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோா் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக அடையாறு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். பின்னா் இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் நடிகா் சூரி மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், ‘மோசடி குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அடையாறு போலீஸாா் முதலில் வழக்குப்பதிவு செய்யவில்லை. காவல்துறை ஆணையரிடம் புகாா் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, அடையாறு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும் ரமேஷ் குடவாலா போலீஸ் உயா் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். எனவே, இந்த வழக்கை சிபிஐ அல்லது வேறொரு புலன்விசாரணை அமைப்பின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.ரவீந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் பிரபாவதி, இதுதொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டாா். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு தொடா்பாக காவல்துறை ஆணையா் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com