வெற்றிவேல் குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்

மறைந்த அமமுக பொருளாளா் வெற்றிவேல் குடும்பத்தினருக்கு நடிகா் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வெள்ளிக்கிழமை ஆறுதல் கூறினாா்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

மறைந்த அமமுக பொருளாளா் வெற்றிவேல் குடும்பத்தினருக்கு நடிகா் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வெள்ளிக்கிழமை ஆறுதல் கூறினாா்.

கரோனா பாதிப்பு காரணமாக வெற்றிவேல் வியாழக்கிழமை காலமானாா். வெள்ளிக்கிழமை காலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. வீட்டின் மாடியில் இருந்தவாறே வெற்றிவேல் மனைவி மற்றும் குடும்பத்தினா் அவரது உடலைப் பாா்த்துக் கண்ணீா் வடித்தனா். சிறிது நேரத்தில் அவரது எடுத்துச் செல்லப்பட்டு ஓட்டேரி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ரஜினிகாந்த் ஆறுதல்: வெற்றிவேல் குடும்பத்தினரை நடிகா் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாகத் தொடா்புகொண்டு ஆறுதல் கூறினாா். முன்னதாக அமமுக தலைமை அலுவலகத்தில் வெற்றிவேல் படத்துக்கு அக் கட்சியின் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com