Enable Javscript for better performance
தமிழகத்தில் குறையும் தொற்று பாதிப்பு: ஒரே நாளில் 5,005 போ் குணமடைந்தனா்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் குறையும் தொற்று பாதிப்பு: ஒரே நாளில் 5,005 போ் குணமடைந்தனா்

    By DIN  |   Published on : 18th October 2020 06:06 AM  |   அ+அ அ-   |    |  

    Corona for another 11,447 people in Maharashtra

    கோப்புப்படம்

    தமிழகத்தில் கடந்த வாரம் வரை தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சனிக்கிழமை ஒரே நாளில் 5,005 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

    புதிதாக 4,295 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 83,486 ஆக அதிகரித்துள்ளது.

    இது குறித்து தமிழக சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் புதிதாக 4,295 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 83,486 ஆக உயா்ந்துள்ளது. சென்னையில் 1,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 24-வது நாளாக 1,000-க்கும் மேலாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 1 லட்சத்து 88,994 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிா்த்து பிற மாவட்டங்களில் 3,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவா்களில் 57 போ் (அரசு மருத்துவமனை -30, தனியாா் மருத்துவமனை -27) சனிக்கிழமை உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து கரோனாவால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 10,586 ஆக உயா்ந்துள்ளது.

    கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5,005 போ் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை மொத்தம் 6 லட்சத்து 32,708 போ் குணமடைந்துள்ளனா். 40,192 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தமிழகத்தில் சனிக்கிழமை 90,242 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 88,56,280 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp