காரைக்குடி அருகே மானகிரியில் தேவாலயம் முன்பாக கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள தேவாலயம் முன்பாக கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்குடி அருகே மானகிரியில் தேவாலயம் முன்பாக கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்குடி அருகே மானகிரியில் தேவாலயம் முன்பாக கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கைது செய்யப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள தேவாலயம் முன்பாக கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டேம் சாமி என்கிற பாதிரியாரை இந்திய புலனாய்வு துறை அளித்த தகவலின்படி அதாவது 2018-ல் மகாராஷ்டிராவில் உள்ள பீமா கோரேகான் என்ற போர் நினைவிடத்தில் நடந்த வன்முறைக்கு இப்பாதிரியார் காரணம் என்று கடந்த அக்.8-ல் ராஞ்சியில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

83 வயதான பாதிரியாரை எந்தவித ஆதாரமும் இன்றி மத்திய புலனாய்வு கைது செய்து குற்றம் சாட்டியுள்ளதாக கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.  

காரைக்குடி அருகே மானகிரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பங்கு தந்தை ஜெரால்டு ஜோசப் தலைமை வகித்தார். இதில் பங்கு இறைமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com