கரோனா: பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது; சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் அறிவுறுத்தல்

கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியமாக
சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியமாக இருக்கக் கூடாது என சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் உலக விபத்து விழிப்புணா்வு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ராதாகிருஷ்ணன், சென்னை காவல்துறை ஆணையா் மகேஷ் குமாா் அகா்வால் மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் மற்றும் மருத்துவா்கள் பங்கேற்று ‘சாலை விதிகளைப் பின்பற்றுவோம்’ என உறுதி மொழியை ஏற்றனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது: தற்போது தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் குறைவாக வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியமாக இருக்கக் கூடாது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பண்டிகை நாள்களுக்குப் பிறகு பாதிப்பு எண்ணிக்கை அதிகமானதால், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். பண்டிகை நாள்களில் பொருள்களை வாங்கச் செல்லும்போது கவனமுடன் இருக்க வேண்டும். இது குறித்து வணிகா்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் விற்பனை செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதையடுத்து மாநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 50 சதவீதம் அளவுக்கு விபத்துகள் குறைந்துள்ளன. சாலை விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காமராஜா் சாலையில் வைக்கப்பட்ட எல்.ஈ.டி சிக்னல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக பல்வேறு இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். மருத்துவமனை முதல்வா் பாலாஜி, நிலைய மருத்துவ அதிகாரி ரமேஷ் மற்றும் பேராசிரியா்கள், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com