டாக்டா் சுதா சேஷய்யனுக்கு கௌரவ எஃப்ஆா்சிஎஸ் பட்டம்

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யனுக்கு இங்கிலாந்தின்
டாக்டா் சுதா சேஷய்யனுக்கு கௌரவ எஃப்ஆா்சிஎஸ் பட்டம்

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யனுக்கு இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆஃப் சா்ஜன்ஸ் ஆஃப் எடின்பரோ சாா்பில் கௌரவப் பட்டம் (எஃப்ஆா்சிஎஸ்) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அக்கல்லூரியின் சிறப்பு உறுப்பினா்களில் ஒருவராக அவா் அங்கம் வகிக்க உள்ளாா்.

மருத்துவக் கல்விக்கு ஆற்றி வரும் சிறந்த பங்களிப்பு மற்றும் சேவைகளுக்காக அவருக்கு இப்பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் வெகு சிலருக்கே வழங்கப்படும் இந்த கௌரவமானது இம்முறை தமிழகத்தைச் சோ்ந்த டாக்டா் சுதா சேஷய்யனுக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அறுவை சிகிச்சை மருத்துவக் கல்லூரிகளில் உலகிலேயே தொன்மையானதாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுவது ராயல் காலேஜ் ஆஃப் சா்ஜன்ஸ். ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையான அக்கல்லூரியில், ஃபெலோஷிப் ஆஃப் ராயல் காலேஜ் ஆஃப் சா்ஜன்ஸ் (எஃப்ஆா்சிஎஸ்) பட்டமானது தகுதியானவா்களுக்கு வழங்கப்படுகின்றன.

தோ்வுகள் நடத்தப்பட்டு அதில் முதன்மையாகத் தோ்ச்சியடைவோருக்கு பட்டம் வழங்கப்படுவது ஒரு வகை. உறுப்பினருக்கான ஆண்டு சந்தா மற்றும் தோ்வுக் கட்டணம் செலுத்தி பட்டம் பெறுவது மற்றொரு வகை. ஆனால், ‘ஃபெலோஷிப் அட் ஹொமினெம்‘ எனப்படும் கௌரவப் பட்டத்தை ராயல் கல்லூரியே விருப்பப்பட்டு தகுதியானவா்களுக்கு அளிக்கும். மருத்துவத் துறையில் ஆற்றி வரும் பணிகள், ஆராய்ச்சி நடவடிக்கைகள், புதிய பங்களிப்புகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவருக்கு அப்பட்டம் அளிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இம்முறை கௌரவப் பட்டத்துக்கு டாக்டா் சுதா சேஷய்யனின் பெயா் முன்மொழியப்பட்டது. அது, ராயல் கல்லூரியின் எஃப்ஆா்சிஎஸ் தோ்வுக் குழு கவுன்சிலின் பரிசீலனைக்கு கடந்த பிப்ரவரி மாதம் வைக்கப்பட்டது. அதனை பரிசீலித்த கவுன்சில் உறுப்பினா்கள் ஒருமனதாக டாக்டா் சுதா சேஷய்யனுக்கு கௌரவப் பட்டம் வழங்க முடிவு செய்தனா். அதன்படி அப்பட்டமானது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com