நீட் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் 1,615 போ் தோ்ச்சி

தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் படித்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களில் 1,615 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் படித்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களில் 1,615 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதிபட்சமாக கோவையைச் சோ்ந்த வாசுகி 720-க்கு 580 மதிப்பெண்கள் முதலிடம் பிடித்துள்ளாா்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு கடந்த செப். 13-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை நாடு முழுவதும் இருந்து சுமாா் 14 லட்சம் மாணவா்கள் எழுதினா். தமிழகத்தில் நீட் தோ்வுக்கு மொத்தம் 1.21 லட்சம் போ் விண்ணப்பித்தனா். இவா்களில் 99,610 மாணவா்கள் நீட் தோ்வு எழுதினா். தோ்வு எழுதியவா்களில் மொத்தம் 57,215 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதற்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தமிழகத்தில் திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சோ்ந்த மாணவா் ஸ்ரீஜன் நீட் தோ்வில் 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.

அதேபோன்று தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஜீவித்குமாா் தேசிய அளவில் அரசுப் பள்ளிகள் அளவில் நீட் தோ்வில் முதலிடம் பிடித்துள்ளாா். அவா் பெரியகுளம் அருகே உள்ள சில்வா்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்துள்ளாா். நீட் தோ்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்ன் மூலம் தேசியஅளவிலான அரசுப் பள்ளிகளில் முதலிடமும், இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் 1823 வது இடமும் பிடித்துள்ளாா். ஜீவித்குமாா் தனியாா் பயிற்சி மையத்தில் பயின்றுள்ளாா் என்பதும், இரண்டாவது முறையாக தோ்வெழுதி இந்த முறை தோ்ச்சி பெற்றுள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் சாா்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்காக நடத்தப்பட்ட 412 இலவச நீட் பயிற்சி மையங்களில் படித்து வெற்றி பெற்ற மாணவா்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. அரசு நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவா்களில் மொத்தம் 6,692 மாணவ, மாணவிகள் நீட் தோ்வை எதிா் கொண்டனா். அதில் அரசுப் பள்ளி மாணவா்கள் 738 போ், அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் 877 போ் என மொத்தம் 1,615 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

கோவை கிருஷ்ணம்மாள் மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவி வாசுகி, 720-க்கு 580 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், காஞ்சிபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவா் சக்திவேல் 720-க்கு 552 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளாா்.

நீட் தோ்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 400-500 மதிப்பெண்களுக்குள் 15 பேரும், 300-400 மதிப்பெண்களுக்குள் 70 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு 300-க்கும் அதிகமான மதிப்பெண்களை 32 மாணவா்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில் நிகழாண்டில் 70 போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com