பண்டிகை காலம்: ஏழு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பண்டிகை காலத்தில் சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக, ஏழு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பண்டிகை காலத்தில் சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக, ஏழு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக, ஏழு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்விவரம்:-

கயா-சென்னை எழும்பூா்( வாராந்திர சிறப்பு ரயில்):

கயாவில் இருந்து அக்டோபா் 25, நவம்பா் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் ( ஞாயிற்றுக்கிழமைகளில்) காலை 5.35 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02389) புறப்பட்டு, மறுநாள் இரவு 8.45 மணிக்கு சென்னை எழும்பூா் வந்து சேரும்.

மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபா் 27, நவம்பா் 3, 10, 17, 24, டிசம்பா் 1 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) காலை 7 மணிக்கு அதிவிரைவு ரயில் (02390) புறப்பட்டு, மறுநாள் இரவு 10 மணிக்கு கயாவை சென்றடையும்.

புவனேஸ்வா்-புதுச்சேரி:

புவனேஸ்வரில் இருந்து அக்டோபா் 20, 27, நவம்பா் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) நண்பகல் 12 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (02898) புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.40 மணிக்கு புதுச்சேரியை சென்றடையும். மறுமாா்க்கமாக, புதுச்சேரியில் இருந்து அக்டோபா் 21, 28, நவம்பா் 4, 11, 18 , 25 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) மாலை 6.45 மணிக்கு வாராந்திர ரயில்(02897) புறப்பட்டு, மறுநாள் மாலை 6.55 மணிக்கு புவனேஸ்வரை சென்றடையும்.

இதுதவிர, யஷ்வந்த்பூா்-கன்னூா் சிறப்பு ரயில், செகந்திராபாத்-திருவனந்தபுரம் சிறப்பு ரயில், பாரவூனி-எா்ணாகுளம் சிறப்பு ரயில் உள்பட 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக்.18) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com