வேதாரண்யம் வேதாமிர்த ஏரிக்குள் கோவில் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பூமி பூஜை

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தூர்வாரும் பணி நடைபெற்று வரும் நிலையில், மையப் பகுதியில் கோவில் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
கோவில் கட்டும் பணிக்காக நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
கோவில் கட்டும் பணிக்காக நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தூர்வாரும் பணி நடைபெற்று வரும் நிலையில், மையப் பகுதியில் கோவில் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

வேதாரண்யம் வேதாமிர்த ஏரி பல்வேறு சிறப்பு பெற்றவை. 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி பல ஆண்டுகளுக்கு பிறகு ரூ.6 கோடியே 50 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏரியின் கீழ் கரையில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு எதிரே ஏரியின் மையப் பகுதியில் சிறிய அளவில் கோவில் கட்டப்படவுள்ளது.

அதற்கான பணியை பூமி பூஜை செய்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com