கம்பத்தில் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

தேனி மாவட்டம் கம்பத்தில் தீயணைப்புப் பணிகள் மற்றும் மீட்புத் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு பேரணி, பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தீயணைப்புப் பணிகள் மற்றும் மீட்புத் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு மற்றும் பண்டிகை கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்கப்படும் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு பேரணி, பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் கரோனா தொற்று, பண்டிகை காலத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு, பேரணி, பிரசாரம் நடைபெற்றது.

கம்பம் வடக்கு என்.எஸ்.கே.திடலில் நடை ஓட்டம், சைக்கிள் பேரணியுடன் பிரச்சாரத்தை நிலைய அலுவலர் அழகர்சாமி தொடங்கி வைத்தார். ஏ.கே.ஜி.திடல், சிக்னல், அரசமரம், காந்திசிலை, வ.உ.சி. திடல், அரசு மருத்துவமனை வரை பேரணி சென்றது. முக்கிய இடங்களில் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளி குறித்து நிலைய அலுவலர் பேசி துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். விழிப்புணர்வு நிகழ்வில் தன்னார்வலர்கள், தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com