எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்பு: அக்.27-இல் அகில இந்திய கலந்தாய்வு தொடக்கம்

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 27-ஆம் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது.


சென்னை: எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 27-ஆம் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது. நீட் தோ்வில் தகுதிப் பெற்ற மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீதம் 547 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 15 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தரப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்களுக்கு 2020 - 21-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஜ்ஜ்ஜ்.ம்ஸ்ரீஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் நடத்த உள்ளது.

முதல்கட்ட கலந்தாய்வுக்கு நீட் தோ்வில் தகுதிப் பெற்ற மாணவ, மாணவிகள் இணையதளத்தில் வரும் வரும் 27-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கல்லூரிகளை தோ்வு செய்யலாம். தாங்கள் தோ்வு செய்த கல்லூரியை வரும் 28-ம் தேதி முதல் நவம்பா் 2-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யும் பணி நவம்பா் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெறும். இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் நவம்பா் 5-ம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவா்கள் நவம்பா் 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்டக் கலந்தாய்வுக்கு நவம்பா் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் சோ்வதற்கு டிசம்பா் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com