தமிழகம் முழுவதும் அக். 27-இல் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அக். 27 ஆம் தேதி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலர் கே. முகமது அலி தெரிவித்தார். 
மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் கே. முகமது அலி. உடன், மாநிலச் செயலர் என். செல்லதுரை உள்ளிட்டோர்.
மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் கே. முகமது அலி. உடன், மாநிலச் செயலர் என். செல்லதுரை உள்ளிட்டோர்.

பெரம்பலூர்:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அக். 27 ஆம் தேதி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலர் கே. முகமது அலி தெரிவித்தார். 

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம், பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  

இக்கூட்டத்தில்சங்கத்தின் மாநில பொதுச் செயலர் கே. முகமது அலி அளித்த பேட்டி:

தமிழகத்தில் தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதைவிட, ஆவின் பால் நிர்வாகம் நெருக்கடியில் உள்ளது. ஆவின் நிறுவனம் நிர்வாக சீர்கேடுகளால் கடுமையான நஷ்டத்தில் செயல்படுகிறது. எனவே, ஆவின் நிறுவனத்தில் நிர்வாக சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கியுள்ள உற்பத்தியாளர்களுக்கு 3 மாதங்கள் வரை, அதற்கான தொகையை வழங்காமல் சுமார் ரூ. 500 கோடி பாக்கி வைத்துள்ளது. அந்தத் தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன் வழங்க வேண்டும்.

தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில், பால் வழங்கியுள்ளவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும். பல மாவட்ட, ஒன்றியங்களில் சில நாள்களுக்கு தொடர்ந்து பால் கொள்முதலுக்கு விடுமுறை விடுவதையும், ஒரு பகுதி பாலை வாங்காமல் திரும்பி அனுப்புவதையும் நிறுத்த வேண்டும். ஆவின் நிர்வாகத்தில் நிலவும் ஊழலை  தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

தற்போதையச் சூழலில் பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் கால்நடை தீவனங்கள் வழங்க வேண்டும். பாலுக்கான கொள்முதல் விலையில் 1 லிட்டருக்கு ரூ. 5 ஊக்கத் தொகையாக கூடுதலாக வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களிடம் பிடித்த செய்யப்படும் அண்ணா பொதுநல நிதியை, பால் உற்பத்தியாளர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வருகிற 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 'ஆவினைப் பாதுகாப்போம், பால் உற்பத்தியாளர்களை பாதுகாப்போம்' என்ற அடிப்படையில் ஆட்சியரகம், ஆவின் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் முகமது அலி.

பேட்டியின் போது, சங்கத்தின் மாநிலச் செயலர் என. செல்லதுரை, துணைச் செயலர் ராமநாதன், கடலூர் மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com