பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 7 ஆக உயர்வு
பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 7 ஆக உயர்வு

பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி 7 ஆக உயர்வு

மதுரை அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.


பேரையூர்: மதுரை அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே செங்குளம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் அனுமதி பெற்ற இந்த ஆலையில் சீனி வெடி மற்றும் தரைச் சக்கரம் மற்றும் சிறிய ரக வெடிகள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதியை மீறி பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை 35 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணி மருந்து உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ அந்த அறை முழுவதும் மளமளவென பரவி அருகில் இருந்த இரண்டு அறைகளுக்கும் பரவியதில் 3 அறைகளும் முற்றிலும் சேதம் அடைந்தன.

இந்த விபத்தில் அங்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிலார்பட்டியை சேர்ந்த பாண்டி மனைவி லட்சுமி(40), காடனேரியை சேர்ந்த கருப்பையா மனைவி அய்யம்மாள்(65),கோவிந்தநல்லூரை சேர்ந்த பாண்டி மனைவி  சுருளியம்மாள்(50),எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி  வேல்த்தாய்(45) ,அத்திபட்டியை சேர்ந்த சுந்தரம் மனைவி காளீஸ்வரி(35) உள்ளிட்ட 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் ஆமத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த ராமர் மகன் சுந்தரமூர்த்தி(39), காடனேரியை சேர்ந்த பெருமாள் மனைவி லட்சுமி (45), அதே கிராமத்தை சேர்ந்த குருசாமி மனைவி மகாலட்சுமி (45) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 3 பேரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் தீக்காயப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதில், லட்சுமி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். 

இந்நிலையில்,  சிகிச்சை பெற்று வந்த காடனேரியை சேர்ந்த மகாலட்சுமி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com