தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,600-க்கு விற்பனை

சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
Gold prices fell by Rs 192 to Rs 37,600 per ounce
Gold prices fell by Rs 192 to Rs 37,600 per ounce

சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.192 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.24 குறைந்து, ரூ.4,700 ஆக உள்ளது. 

வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.67.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.67,000 ஆகவும் உள்ளது

சனிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்.......................... 4,700

1 சவரன் தங்கம்...............................37,600

1 கிராம் வெள்ளி.............................67.00

1 கிலோ வெள்ளி.............................67,000

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,724

1 சரவன் தங்கம்............................... 37,792

1 கிராம் வெள்ளி............................. 67.30

1 கிலோ வெள்ளி............................. 67,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com