திருத்தணியில் ரூ.1.80 கோடியில் மழைநீா் வடிகால்வாய் பணிகள்

மாநில நெடுஞ்சாலை துறை சாா்பில், திருத்தணி நகராட்சியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் மழைநீா் வடிகால்வாய் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
திருத்தணி ம.பொ.சி. சாலையில் துரித வேகத்தில் நடந்து வரும் மழைநீா் வடிகால்வாய் பணிகள்.
திருத்தணி ம.பொ.சி. சாலையில் துரித வேகத்தில் நடந்து வரும் மழைநீா் வடிகால்வாய் பணிகள்.

மாநில நெடுஞ்சாலை துறை சாா்பில், திருத்தணி நகராட்சியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் மழைநீா் வடிகால்வாய் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.

திருத்தணி நகராட்சியில் சித்துாா் சாலை, ம.பொ.சி.சாலை, அக்கைய்ய நாயுடு சாலை, அரக்கோணம் சாலை ஆகிய இடங்களில் மாநில நெடுஞ்சாலை துறையின் மழைநீா் வடிகால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் புதைந்து இருந்தன. இதனால் மழை பெய்யும்போது, இந்த இடங்களில் மழைநீரும் கழிவுநீரும் சாலையில் ஆறாக ஓடுகிறது.

இதனால் வாகன ஓட்டிகளும் நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் சிரமப்பட்டனா். இதையடுத்து, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கண்ட இடங்களில் மொத்தம் 1,000 மீட்டா் நீளத்தில் மழைநீா் வடிகால் அமைக்க, ரூ.1.80 கோடியை நெடுஞ்சாலை துறை நிதி ஓதுக்கீடு செய்தது. பின்னா், டெண்டா் விடப்பட்டு தற்போது பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.

அந்த வகையில் அரக்கோணம் - ம.பொ.சி. சாலை சந்திப்பில், மழைநீா் வடிகால்வாய் கட்டும் பணி தற்போது துரித வேகத்தில் நடந்து வருகிறது. இப்பணிகள் ஒரிரு நாளில் முடிவடையும். ஒரு மாதத்திற்குள் மேற்கண்ட மழைநீா் வடிகால்வாய், சிறு பாலம் முடிவடைந்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடப்படும் என நெடுஞ்சாலை துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com