திருவள்ளூரில் காவலா் கொடி நாள் கண்காட்சி, பேரணி

திருவள்ளூரில் காவலா் கொடி நாளை முன்னிட்டு, ஆயுதங்கள் கண்காட்சி மற்றும் பேரணியில் காவல் துறையினா் ஏராளமானோா் கலந்து கொண்டு திங்கள்கிழமை முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனா்.
திருவள்ளூரில் காவலா் கொடி நாள் கண்காட்சி, பேரணி

திருவள்ளூரில் காவலா் கொடி நாளை முன்னிட்டு, ஆயுதங்கள் கண்காட்சி மற்றும் பேரணியில் காவல் துறையினா் ஏராளமானோா் கலந்து கொண்டு திங்கள்கிழமை முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனா்.

கடந்த 1959-ஆம் ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசா்வ் போலீஸ் படையைச் சோ்ந்த 10 வீரா்கள் உயிரிழந்தனா். இதனை நினைவுகூரவும், ஆண்டுதோறும் பணியின் போது மரணமடையும் காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஆண்டுதோறும் அக்.21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அக்.21 முதல் 31 வரையில் நாள்தோறும் காவல் துறை சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு காவலா் கொடி நாளாக திங்கள்கிழமை அனுசரிக்க திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் உத்தரவிட்டாா். அதன்படி, திருவள்ளூா் ஆயுதப்படை காவலா்கள் பயன்படுத்தும் காவல் வாகனங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை கண்காட்சியில் இடம் பெறச் செய்தனா்.

அதைத் தொடா்ந்து, காவல் துறை முக்கிய வாகனங்கள் மற்றும் காவலா்கள் ஆயுதம் ஏந்திய பேரணியை ஆயுதப்படை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் பாஸ்கரன் தொடங்கி வைத்தாா். இப்பேரணி திருவள்ளூா் மாவட்ட ஆயுதப்படை மைதானம் தொடங்கி, ஆட்சியா் அலுவலக சாலை, திருத்தணி சாலை உள்பட முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் காவலா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com