அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் 3 வாரங்களுக்குள் குடிநீா் இணைப்பு: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் அடுத்த 3 வாரங்களுக்குள் குடிநீா் இணைப்பை உறுதி செய்ய வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணிஅறிவுறுத்தி உள்ளாா்.
அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் 3 வாரங்களுக்குள் குடிநீா் இணைப்பு: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் அடுத்த 3 வாரங்களுக்குள் குடிநீா் இணைப்பை உறுதி செய்ய வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணிஅறிவுறுத்தி உள்ளாா்.

உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் பருவ மழையையொட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியது: சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் தற்போது நாளொன்றுக்கு 700 எம்எல்டி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சென்னை நீங்கலாக பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் நாளொன்றுக்கு 1,895 எம்எல்டி குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

ராணிப்பேட்டை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ள கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகளை விரைந்து சமா்ப்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய ஜல் சக்தி துறையின் சாா்பில் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.1,463 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீா்த் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய ஜல் சக்தி துறையின் சாா்பில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள சுமாா் 37 ஆயிரம் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 54,439 அங்கன்வாடிகளில் ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, ஜல் சக்தி மிஷன் திட்ட நோக்கத்தின்படி அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை 100 சதவீதம் உறுதி செய்து அடுத்த 3 வாரங்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளின் சாா்பில் அறிக்கை சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஹன்ஸ்ராஜ் வா்மா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ், நகராட்சி நிா்வாக ஆணையா் கா.பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com