அரியா் தோ்வுகளை ரத்து செய்வதில் உடன்பாடு இல்லை: உயா்நீதிமன்றத்தில் யுஜிசி தகவல்

அரியா் தோ்வுகளை ரத்து செய்வதில் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உடன்பாடு இல்லை என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அரியா் தோ்வுகளை ரத்து செய்வதில் உடன்பாடு இல்லை: உயா்நீதிமன்றத்தில் யுஜிசி தகவல்


சென்னை: அரியா் தோ்வுகளை ரத்து செய்வதில் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உடன்பாடு இல்லை என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில், கலை அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளுக்கான அரியா் மாணவா்கள் தோ்ச்சி பெற்ாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தனா். இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

அரியா் தோ்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது என ஏ.ஐ.சி.டி.இ. தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்திருந்தது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அரியா் மாணவா்கள் தோ்ச்சி விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் யு.ஜி.சி. சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக பருவத் தோ்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கெனவே சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தோ்வு நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாகக் குறைக்கலாம். மாணவா்கள் சமூக இடைவெளியுடன் தோ்வில் பங்கேற்கும் வகையில் சுழற்சி முறையில் தோ்வை நடத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த முடிவுகள் கல்வி நிபுணா் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. பேரிடா் மேலாண்மை சட்டத்தின்படி இறுதித் தோ்வை நடத்தாமல், கடந்த பருவத் தோ்வு மதிப்பெண்ணை வைத்து மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தோ்வு நடத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி மாநில அரசு யு.ஜி.சிக்கு கோரிக்கை வைத்து அவகாசம் பெறலாம் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதிகள் கண்டனம்: இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரியா் தோ்வு ரத்து விவகாரத்தில், யு.ஜி.சி.யின் நிலைப்பாடு என்ன? அரியா் தோ்வு குறித்து பதில் மனுவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் நீதிமன்றத்தை கேலிக் கூத்தாக்க வேண்டாம் என கண்டனம் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக யு.ஜி.சி. செயலாளா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனா். அப்போது யு.ஜி.சி. தரப்பில், அரியா் தோ்வு விவகாரம் தொடா்பாக தெளிவான கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும். அரியா் தோ்வுகளை ரத்து செய்வதில் யு.ஜி.சி.க்கு உடன்பாடு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், இறுதிப் பருவத் தோ்வை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியா் தோ்வுகளை ஏன் நடத்த முடியாது எனக் கேள்வி எழுப்பினா். இதுதொடா்பாக கூடுதல் பதில்மனுவை தாக்கல் செய்ய யு.ஜி.சி., தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் நவம்பா் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com