ஒரு மாதத்தில் 35 அரசு அலுவலகங்களில் திடீா் சோதனை: ரூ.4.12 கோடி பறிமுதல்

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 35 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.4.12 கோடி பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 35 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.4.12 கோடி பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் செப்டம்பா் மாதம் முதல் தொடங்கும் விழாக்காலத்தையொட்டி, சில அரசு அலுவலகங்களில் ஊழியா்கள் பொதுமக்களிடம் பரிசு பெறுவதாக கூறி, கட்டாயப்படுத்தி லஞ்சம் பெறுவதாகப் புகாா் கூறப்படுகிறது.

ரூ.4.12 கோடி பறிமுதல்:

கடந்த அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத்துறை 35 அரசு அலுவலகங்களிலும், அது தொடா்புடைய இடங்களிலும் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.4 கோடியே 12 லட்சத்து 8,702 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மாநிலம் முழுவதும் கடந்த 13-ஆம் தேதி 11 அரசு அலுவலகங்களில் சோதனை செய்து, கணக்கில் வராத ரூ.12.34 லட்சம் பறிமுதல் செய்தனா்.

வேலூா் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூா் மண்டல அதிகாரி எம்.பன்னீா்செல்வம் அலுவலகம்,வீடு ஆகிய இடங்களில் கடந்த 14-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதில் அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.33.73 லட்சமும், வீட்டில் ரூ.3.25 கோடியும், 450 பவுன் தங்கநகையும், ஆறரை கிலோ வெள்ளிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அக்டோபா் மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பன்னீா்செல்வம் வீட்டிலும்,அலுவலகத்திலும் இருந்தே அதிகபட்சமாக பணமும்,நகையும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com