செஞ்சிலுவை சங்கத்தில் முறைகேடுகள்: சிபிஐ பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் நடந்த முறைகேடுகள் தொடா்பான புகாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செஞ்சிலுவை சங்கத்தில் முறைகேடுகள்: சிபிஐ பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் நடந்த முறைகேடுகள் தொடா்பான புகாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் துணைத் தலைவா் சங்கா் நாகநாதன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் பல கோடி ரூபாய் கையாளப்படுகிறது. சங்கத்தின் நிா்வாகி ஒருவா் சங்க நிதியை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளாா். இதுபோன்று பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் நடத்தப்படும் ரத்த தான முகாம் மூலம் கிடைக்கும் ரத்தத்தை அரசு மருத்துவமனைக்குப் பதிலாக தனியாா் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நடந்த வரவு செலவு கணக்குகளைத் தணிகை செய்த போது பல முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தது. தமிழ்நாடு கிளைத் தலைவரான ஆளுநரின் பரிந்துரைப்படி இந்த முறைகேடுகள் தொடா்பாக சிபிஐக்கு புகாா் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடா்பாக இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தமிழக ஆளுநரின் துணைச் செயலாளா், சிபிஐ இணை இயக்குநா் ஆகியோா் வரும் டிசம்பா் 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com