ஐந்து மாதங்களுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் கோயில் திறப்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை திறப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை திறப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கரோனா பொது முடக்கத்தில் தமிழக அரசு கோவில்கள் நூலகங்களைத் திறக்க உத்தரவிட்டது. இதையடுத்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலில் குவியத் தொடங்கினர். காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து, கால்களைச் சுத்தம் செய்த பின்பு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோவிலில் நிர்வாகம் சார்பில் காய்ச்சல் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு, கை சுத்திகரிப்பான்( சானிடைசர்) வழங்கப்பட்டு  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அபிஷேக பொருள்களான பால், பன்னீர் அர்ச்சனை பொருள்கள் உள்ளிட்டவைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. 

மூலஸ்தானத்தில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.  கம்பத்தடி மாற்றமும் மற்றும் பிற சன்னதிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சமூக விடுதலைக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கட்டங்கள் வரையப்பட்டு தகுந்த பாதுகாப்போடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com