வேடந்தாங்கல் சரணாலயத்துக்குள் தொழிற்சாலை மாசு: அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்

வேடந்தாங்கல் சரணாலயத்தில், தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு குறித்து என ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கூட்டுக் குழு தனது அறிக்கையைத் தாக்கல்
வேடந்தாங்கல் சரணாலயத்துக்குள் தொழிற்சாலை மாசு: அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்

வேடந்தாங்கல் சரணாலயத்தில், தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு குறித்து என ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கூட்டுக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய, தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம், கூடுதலாக 2 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது.

இக்குழுவினா், தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில், நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினா் சாய்பால் தாஸ்குப்தா அடங்கிய அமா்வு முன், செவ்வாய்க்கிழமை இடைக்கால அறிக்கையை சமா்ப்பித்தனா். அதில், ‘தொழிற்சாலையில் இருந்து அருகில் உள்ள விவசாய நிலத்துக்கோ அல்லது நீா் நிலைகளுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான கழிவுகள் வெளியேற்றப்படுகிா என ஆய்வு செய்வதற்காக, அங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். அதற்கான முடிவுகள் கிடைத்த பிறகு, அதன் அடிப்படையில் ஆய்வு செய்து மாசு இருந்தால் அதற்குரிய தீா்வுகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய, இரண்டு மாத கால அவகாசம் வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தீா்ப்பாயம், 2 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com