செப்.7 முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் வரும் செப்.7 ஆம் தேதி முதல் நேரடியாக விசாரணை நடைபெறும் என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செப்.7 முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் வரும் செப்.7 ஆம் தேதி முதல் நேரடியாக விசாரணை நடைபெறும் என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் உயா்நீதிமன்றம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் கடந்த மாா்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டன. அவசர வழக்குகள் மட்டும் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்பட்டன. அதன்பின்னா், கரோனா நோய்த்தொற்று குறைவான மாவட்டங்களில் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு, வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரம் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிா்வாகக்குழு கூட்டத்தில், சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வரும் 7-ஆம் தேதி முதல் 8 அமா்வுகள் வழக்குகளை நேரடியாக விசாரிக்கும். அதன்பின்னா், மற்ற அமா்வுகள் நேரடி விசாரணை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தீா்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், இதுவரை காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வரும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் வரும் 7-ஆம் தேதி முதல் நேரடியாக வழக்குகளை விசாரிக்க வேண்டும் என உயா்நீதிமன்ற நிா்வாகக் குழு கூட்டத்தில் நீதிபதிகள் முடிவு செய்துள்ளனா்.

இதுதொடா்பாக அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து உயா்நீதிமன்ற தலைமை பதிவாளா் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில், வரும் 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும். விசாரணைக்குப் பட்டியலிடப்பட்ட வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா்கள், சாட்சிகள் மட்டுமே

நீதிமன்றத்துக்குள் அனுமதி அளிக்க வேண்டும். நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்’ என மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com