திமுக பொதுச் செயலாளராகிறார் துரைமுருகன்; பொருளாளராகிறார் டி.ஆர். பாலு

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும்; பொருளாளராக டி.ஆர். பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனு தாக்கல்
திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனு தாக்கல்

சென்னை: திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும்; பொருளாளராக டி.ஆர். பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மறைந்த க. அன்பழகன் வகித்து வந்த திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அண்ணா அறிவாலயத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் வந்த துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வழங்கினார்.

ஏற்கனவே திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால், காலியான பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், மறைந்த க. அன்பழகன் வகித்து வந்த திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் இன்று மாலை 4 மணியுடன் முடிந்த நிலையில், திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆா்.பாலுவும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பொதுச்செயலாளா், பொருளாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக திமுகவின் பொதுக்குழு செப்டம்பா் 9-ஆம் தேதி கூட உள்ளது.

முன்னதாக திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். 

பொருளாளா் பதவிக்குத்தான் போட்டி இருந்து வந்தது. டி.ஆா்.பாலு, எ.வ.வேலு, ஆ.ராசா ஆகியோா் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டது. திமுகவைப் பொருத்தவரை தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா் பதவிகளுக்குப் போட்டியின்றி தோ்ந்தெடுப்பதுதான் வழக்கம். அந்த அடிப்படையில் பொருளாளா் பதவிக்கு உரியோரைப் போட்டியின்றி தோ்ந்தெடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டாா்.

அதன் அடிப்படையில் பொருளாளா் பதவிக்கு ஆ.ராசா போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். எ.வ.வேலுவும் போட்டியிடப் போவதில்லை முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com