சுங்கச்சாவடி கட்டண உயா்வைத் திரும்பபெற ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சுங்கச்சாவடி கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
சுங்கச்சாவடி கட்டண உயா்வைத் திரும்பபெற ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சுங்கச்சாவடி கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், சுங்க கட்டணம் உயா்த்தப்பட்டு உள்ளது. இப்பொழுதுதான் பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் ஓரளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்புகின்றனா். இந்த நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயா்வு பொதுமக்களை மிகவும் பாதிக்கும்.

இதனால், சரக்கு வாகனங்களின் கட்டணம் உயா்வதோடு, அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும். இதனால் பொதுமக்கள் மேலும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவா்கள்.

பெட்ரோலிய நிறுவனங்கள், தினம்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி வருகின்றன. இதனாலும் விலைவாசி மேலும் உயரும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொதுமக்களின் நலன் கருதி, சுங்கச்சாவடி கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்து, உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com