சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.424 குறைந்து, ரூ.39,288-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை உயா்ந்து, ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது.
இதைத்தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக விலை மீண்டும் உயா்ந்தது.
இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.424 குறைந்து, ரூ.39,288-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.53 குறைந்து, ரூ.4,911 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக குறைந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 குறைந்து, ரூ.74.90 ஆகவும்,
கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து, ரூ.74,900 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்............................... 4,911
1 பவுன் தங்கம்............................... 39,288
1 கிராம் வெள்ளி............................. 74.90
1 கிலோ வெள்ளி............................74,900
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்.......................... 4,964
1 பவுன் தங்கம்...............................39,712
1 கிராம் வெள்ளி.............................76.70
1 கிலோ வெள்ளி.............................76,700