சேலத்தில் எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிடக்கோரி விவசாயிகளுடன் எம்.பி.க்கள் சந்திப்பு

சேலம் அருகே உள்ள குள்ளம்பட்டி  கிராமத்தில் சேலம்,சென்னை எட்டு வழிச்சாலை பாதிப்பு விவசாயிகளுடன், 6 மக்களவை உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
சேலத்தில் எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிடக்கோரி விவசாயிகளுடன் எம்.பி.க்கள் சந்திப்பு

சேலம் அருகே உள்ள குள்ளம்பட்டி  கிராமத்தில் சேலம்,சென்னை எட்டு வழிச்சாலை பாதிப்பு விவசாயிகளுடன், 6 மக்களவை உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

இதில் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில் சேலம் சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரியும், ஏற்கெனவே உள்ள சென்னை சேலம் இடையே இருக்கும் மூன்று நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 6 நாடாளுமன்ற உறுப்பினரான சேலம் எஸ்.ஆர் பார்த்திபன், கள்ளக்குறிச்சி கௌதமசிகாமணி, தருமபுரி செந்தில்குமார், கிருஷ்ணகிரி செல்லக்குமார், ஆரணி விஷ்ணுபிரசாத், காஞ்சிபுரம் செல்வம் ஆகியோர் முன்னிலையில் எட்டு வழிச்சாலை பாதிப்பு விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானமாக நிறைவேற்றது.

மேலும் நாடாளுமன்றத்தில் எட்டு வழி சாலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உரையாற்ற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மக்களவை  உறுப்பினர்கள் கூறும்போது,

இந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல தொடர்ந்து வலியுறுத்துவோம். திட்டத்தை தமிழகத்தில் கொண்டுவர முயற்சிக்கும் அதிமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com