சிறப்புக் காய்ச்சல் முகாம்: 17% பேருக்கு கண்டறியப்பட்ட கரோனா

சென்னையில் மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வரும் சிறப்புக் காய்ச்சல் முகாம் மூலம் மொத்த பாதிப்பில் 17 சதவீதம் பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சிறப்புக் காய்ச்சல் முகாம்: 17% பேருக்கு  கண்டறியப்பட்ட  கரோனா

சென்னையில் மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வரும் சிறப்புக் காய்ச்சல் முகாம் மூலம் மொத்த பாதிப்பில் 17 சதவீதம் பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்புக் காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த் தொற்று உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிப்பது ஆகிய பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

கடந்த மே மாதம் 8 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 41,651 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில், 22 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்குபெற்றுள்ளனா். இதில், கரோனா அறிகுறிகள் உள்ள 1லட்சத்து 28,240 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், 21,309 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் காய்ச்சல் மருத்துவ முகாம் மூலம் மொத்த பாதிப்பில் 17 சதவீதம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக அம்பத்தூா் மண்டலத்தில் 41 சதவீதமும், மணலியில் 29 சதவீதமும், வளசரவாக்கம், ஆலந்தூரில் தலா 28 சதவீதமும், அண்ணா நகரில் 27 சதவீதமும், கோடம்பாக்கத்தில் 26 சதவீதமும்,பெருங்குடியில் 21 சதவீதமும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

1,025 பேருக்கு தொற்று: புதன்கிழமை 1,025 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 37,732-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 22,407 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 12,537 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,788- ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com