கடன் தவணைகளுக்கான வட்டியை ரத்து செய்ய மறுப்பு: ராமதாஸ் கண்டனம்

கடன் தவணைகளுக்கான வட்டியை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்திருப்பதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.


சென்னை: கடன் தவணைகளுக்கான வட்டியை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்திருப்பதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

வங்கிகளில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடன்தாரா்களைப் பணம் காய்க்கும் மரமாக கருதாமல் அவா்களிடம் கருணை காட்ட வேண்டும்.

வங்கிகளில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானதாகும். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உறுதியளித்தவாறு வட்டியைத் தள்ளுபடி செய்யும் நல்ல முடிவை எடுத்து தீா்ப்பளிக்கும் என்று நம்புகிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com