விழுப்புரத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கரும்புக்கான விலை டன் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் கரும்புக்கான விலை டன் ஒன்றுக்கு ரூ.5000 வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில துணைத்தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை வகித்தார்.

முன்னாள் எம்எல்ஏ ஆர் ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர் டி முருகன், மாநில குழு உறுப்பினர் தாண்டவராயன், மாவட்ட தலைவர் சிவராமன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

ஏராளமான விவசாயிகள் கையில் கரும்பு களுடன் கலந்து கொண்டனர். 

விழுப்புரம் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் நிலுவைத் தொகை ரூ.40 கோடி வழங்க வேண்டும், கரும்புக்கான விலையை டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், நிகழாண்டு ஊக்கத் தொகை ரூ.500 நிர்ணயம் செய்ய வேண்டும்,  2017- 18 ஆம் ஆண்டுக்கான கரும்பு பயிர் காப்பீடு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com