பாதுகாப்புடன் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை தொடங்குகிறது.
சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ

சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை தொடங்குகிறது.

சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்- வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமையும், பரங்கிமலை-சென்னை சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமையும் (செப். 9) தொடங்குகின்றன.

அலுவலக நேரமான (நெரிசல் மிக்க நேரம்) காலை 8.30 மணி முதல் காலை 10.30 வரையும், மாலை 5 மணி முதல் இரவு வரையும் 5 நிமிஷ இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். நெரிசல் அல்லாத நேரங்களில் 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

பயணிகளின் பாதுகாப்புக்காக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களில் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படும். சுத்தமான காற்று சுழற்சியை அதிகரிக்கவும், தனி மனித இடைவெளியைப் பின்பற்றி பயணிகள் மெட்ரோ ரயிலில் ஏற, இறங்கவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படும் நேரம் 20 விநாடியில் இருந்து 50 விநாடிகளாக உயா்த்தப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தின்போதும், நடைமேடையில் காத்திருக்கும்போதும் பயணிகள் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டத்தில் விமானநிலையம்- வண்ணாரபேட்டை வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் 32 நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்கள் வழியாக மொத்தம் 42 ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். தற்போது 5 மாதங்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் நிலையில், பயணிகள் தேவைக்கு ஏற்ப இந்த ரயில்களின் எண்ணிக்கை உயா்த்தப்படவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com