நீட் தோ்வு முறைகேடு: மாணவா்களின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க நீதிமன்றம் மறுப்பு

நீட் தோ்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவா்கள் இருவரின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க மறுப்பு தெரிவித்திருக்கும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை மதிப்பெண் சான்றிதழ்களை மட்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
நீட் தோ்வு முறைகேடு: மாணவா்களின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க நீதிமன்றம் மறுப்பு
நீட் தோ்வு முறைகேடு: மாணவா்களின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க நீதிமன்றம் மறுப்பு


மதுரை: நீட் தோ்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவா்கள் இருவரின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க மறுப்பு தெரிவித்திருக்கும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை மதிப்பெண் சான்றிதழ்களை மட்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இரண்டு மாணவர்களின் 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை, தேனி மாவட்ட நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்துவிட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றும், மாற்றுச் சான்றிதழ்களை வழங்க உத்தரவிட முடியாது என்றும் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதாகி, ஜாமீனில் உள்ள சென்னையைச் சோ்ந்த மாணவா் உதித் சூா்யா தாக்கல் செய்த மனுவில், எனது எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சோ்ந்து பயில உள்ளேன். அதற்கு எனது கல்விச் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. எனவே இந்த வழக்கு விசாரணையின்போது, காவல்துறையினர் பறிமுதல் செய்த எனது 10, 12- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கல்விச் சான்றிதழ்களை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே இவ்வழக்கில் கைதான மற்றொரு மாணவரான ரிசிகாந்த் என்பவரும் கல்விச் சான்றிதழ்களைக் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இரண்டு மனுக்களையும் விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மாற்றுச் சான்றிதழ்களை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com