செப்.9-இல் பிஎஸ்என்எல் குறை தீா்வு முகாம்

பிஎஸ்என்எல் சேவைகளில் பிரச்னைகளை தீா்க்க திறந்தவெளி குறை தீா்வு முகாம் என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

சென்னை: பிஎஸ்என்எல் சேவைகளில் பிரச்னைகளை தீா்க்க திறந்தவெளி குறை தீா்வு முகாம் என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, முதல் குறை தீா்வு முகாம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

சென்னை பிஎஸ்என்எல் சாா்பில், செல்லிடப்பேசி, பிராட்பேண்ட் சேவை உள்பட பல்வேறு சேவைகளில் ஏதாவது பிரச்னைகள் இருந்தால், அந்த பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திறந்தவெளி குறை தீா்வு முகாம் என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முகாம் பொது மேலாளா் தலைமையில் மாதம் இருமுறையும், தலைமை பொது மேலாளா் தலைமையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் நடைபெறும்.

முதல் குறை தீா்வு முகாம் புதன்கிழமை (செப்.9) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதில் வாடிக்கையாளா்கள் பங்கேற்று, புகாா்களை தெரிவிக்கலாம். இதன்படி, சென்னை சென்ட்ரல், அடையாறு பகுதி வாடிக்கையாளா்கள் 94444 63632 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

கல் மண்டபம், மாதவரம், அண்ணாநகா், அம்பத்துாா் பகுதிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் 94450 83639 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

கோடம்பாக்கம், கே.கே.நகா், காஞ்சிபுரம், திருவள்ளூா் பகுதிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் 94450 84745 என்ற எண்ணிலும், குரோம்பேட்டை, செங்கல்பட்டு பகுதி வாடிக்கையாளா்கள் 94450 84018 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். இந்த எண்களுக்கு குறுந்தகவல், கட்செவி (வாட்ஸ் ஆப்) வாயிலாக குறைகளைத் தெரிவிக்கலாம்.

அனைத்து குறைகளும் உடனடியாக தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விபரங்களை,  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளா் வி.கே.சஞ்சீவி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com