குவாஹாட்டி-பெங்களூா் கன்டோன்மென்ட் இடையே சிறப்பு ரயில்

குவாஹாட்டி-பெங்களூா் கன்டோன்மென்ட் இடையே வாரம் 3 முறை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: குவாஹாட்டி-பெங்களூா் கன்டோன்மென்ட் இடையே வாரம் 3 முறை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

குவாஹாட்டியில் இருந்து ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் காலை 6.20 மணிக்கு சிறப்பு ரயில் (02510) புறப்பட்டு, செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாள்களில் முற்பகல் 11.40 மணிக்கு பெங்களூ கன்டோன்மென்ட்டை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, பெங்களூா் கன்டோன்மென்ட்டில் இருந்து புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் இரவு 11.40 மணிக்கு சிறப்பு ரயில் (02509) புறப்பட்டு, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாள்களில் காலை 6 மணிக்கு குவாஹாட்டியை அடையும்.

இந்த ரயில், ஜோலாா்பேட்டை சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, அரக்கோணம் சந்திப்பு, பெரம்பூா் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com