அயனாவரம் ரௌடி சங்கர் கொலை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அயனாவரம் ரௌடி சங்கரின் கொலை வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அயனாவரம் ரௌடி சங்கர் கொலை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
அயனாவரம் ரௌடி சங்கர் கொலை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அயனாவரம் ரௌடி சங்கரின் கொலை வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரவுடி சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை பிடிக்கச் சென்ற காவலர்களை தாக்கியதால், காவலர்கள் தங்களை காத்துக்கொள்ள சுட்டதில் ரௌடி சங்கர் மரணமடைந்தார்.

இந்த வழக்கை அயனாவரம் காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரியும்,  தனது மகனின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிடக்கோரியும் அவரது தாயார் கோவிந்தம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன் உடற்கூறு ஆய்வு  அறிக்கையை  தாக்கல் செய்தார். சிபிசிஐடி காவல்துறை தரப்பிலும் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கரசுப்பு, காவல் ஆய்வாளர் நடராஜனின் விசாரணை அறிக்கை திரைப்பட கதைபோல புனையப்பட்டுள்ளது.

சங்கரின் உடற்கூறு ஆய்வு அறிக்கையை பார்க்கும்போது, தற்காப்புக்காக சுட்டதாக தெரியவில்லை. திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். எனவே காவல் ஆய்வாளர் நடராஜன் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கின் பிரிவுகளை மாற்றுவது குறித்து  விசாரணைக்கு பிறகு சிபிசிஐடி முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

அப்போது வழக்குரைஞர் சங்கரசுப்பு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவரின் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்படவில்லை என்பது தொடர்பாக கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த கூடுதல் மனு நீதிபதிக்கும், சிபிசிஐடி தரப்புக்கும் கிடைக்காததால்,  விசாரணையை வரும் செப்டம்பர் 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com