வாழப்பாடி அருகே தனியார் பால் பண்ணைக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் 18 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் இயங்கும் தனியார் பால் பண்ணைக்கு, வடமாநிலங்களில் இருந்து பேருந்தில் அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களில், 18 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
வாழப்பாடி அருகே தனியார் பால் பண்ணைக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் 18 பேருக்கு கரோனா
வாழப்பாடி அருகே தனியார் பால் பண்ணைக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் 18 பேருக்கு கரோனா


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் இயங்கும் தனியார் பால் பண்ணைக்கு, வடமாநிலங்களில் இருந்து பேருந்தில் அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களில், 18 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அனைவரும் பெரிய கிருஷ்ணாபுரம் கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 வாழப்பாடி அருகே முத்தம்பட்டி இயங்கும் தனியார் பால்பண்ணையில் பணிபுரிந்து வந்த, வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரோனா  பரவல் பொதுமுடக்கத்தால் 4 மாதங்களுக்கு முன்  சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

பொது முடக்கம் முடிவுக்கு வந்த நிலையில், தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, மீண்டும் தொழிற்சாலையில் பணிபுரிவதற்காக உத்தரப்பிரதேசம், பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், முறைப்படி இ-பாஸ் அனுமதி பெற்று, 2,000 கி.மீ தூரத்திலிருந்து, வாழப்பாடி அருகிலுள்ள தொழிற்சாலைக்கு பேருந்தில் வந்து சேர்ந்தனர். 

இந்த தொழிலாளர்களுக்கு பேளூர் வட்டார சுகாதார துறையினர், சளி மாதிரி எடுத்து கரோனா பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 18 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை மாலை உறுதியானது. 

இதனையடுத்து,  தொழிலாளர்கள் 18 பேரும் வாழப்பாடி அருகே பெரியகிருஷ்ணாபுரம் அரசு மாதிரி பள்ளியில் இயங்கும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களோடு பேருந்தில் பயணித்த மற்ற தொழிலாளர்களும் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 

வடமாநிலத்தில் இருந்து தனியார் பால்பண்ணை தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதியான தகவல், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com