அருப்புக்கோட்டையில் கருந்திரி பறிமுதல்: பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காவல்துறையின் அதிரடி சோதனையில் வீடுகளில் சட்டவிரோதமக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50,000 குரோஸ் கருந்திரி பறிமுதல் .
தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, திரிகளைப் பறி முதல் செய்ய விடாமல் தடுத்து, வீடுகளை முற்றுகையிட்டு கதறி அழுத பெண்கள்.
தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, திரிகளைப் பறி முதல் செய்ய விடாமல் தடுத்து, வீடுகளை முற்றுகையிட்டு கதறி அழுத பெண்கள்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காவல்துறையின் அதிரடி சோதனையில் வீடுகளில் சட்டவிரோதமக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50,000 குரோஸ் கருந்திரி பறிமுதல் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அடுத்தடுத்த வீடுகளில் சோதனை நடத்த விடாமல் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

அருப்புக்கோட்டையில் சட்டவிரோதமாக பல இடங்களில் தடைசெய்யப்பட்ட கருந்திரி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நகர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அருப்புக்கோட்டை தெற்குதெரு மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குறப்பிட்ட வீடுகளில் அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினர் அங்கு மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5,00,000 லட்சம் ரூபாய் மதிப்புடைய 50,000 குரோஸ் கருந்திரியை பறிமுதல் செய்தனர். 

காவலர்கள் முன்னிலையில் பறிமுதல் செய்த பட்டாசுத்திரிகள்.

மேலும் அடுத்தடுத்த வீடுகளில் ஏராளமான மூட்டைகளில் கருந்திரி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து சோதனை நடத்தச் சென்ற காவல்துறையினரை மேற்கொண்டு சோதனை நடத்த விடாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீடுகளில் இதுபோன்ற சட்ட விரோதமாக கருந்திரி வைத்திருக்ககூடாது என காவல்துறையினர் அறிவுரை வழங்கியும் அதைக் கேட்காமல் தொடர்ந்து பெண்கள் முற்றுகை இட்டதால் சோதனை நடத்தமால் சோதனையை பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பி சென்றனர்.

கரோனா காலத்தில் வேலை இல்லாமல் தவித்து வரும் எங்களுக்கு கருந்திரிதான் வாழ்வளித்து வந்தது, அதையும் பறிமுதல் செய்தால் எங்கே செல்வது என அப்பகுதி பெண்கள் கதறி அழுதனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com