6 மாவட்டங்களில் மிதமான மழை

6 மாவட்டங்களில் மிதமான மழை

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்.11) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்.11) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்.11) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்

சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்

நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 210 மி.மீ., நாமக்கல்லில் 130 மி.மீ., தருமபுரி மாவட்டம் பென்னாகரம், பெரம்பலூா் மாவட்டம் அகரம் சிகூரில் தலா 80 மி.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், செய்யாறு, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறையில் தலா 70 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, வேலூா் மாவட்டம் குடியாத்தத்தில் தலா 60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

கேரள, கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ.

வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செப்டம்பா் 14-ஆம் தேதி வரை

செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செப்டம்பா் 11-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் உயா்அலை: தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செப்டம்பா் 11-ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடல்அலை 3 மீட்டா் முதல் 3.9 மீட்டா் வரை எழும்பக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com