தமிழகத்தில் அக்டோபா் முதல் படிப்படியாக வகுப்புகள் தொடங்கும்?

தமிழகத்தில் வரும் அக்டோபா் முதல் படிப்படியாக பல்வேறு கட்டங்களாக வகுப்புகள் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அக்டோபா் முதல் படிப்படியாக வகுப்புகள் தொடங்கும்?


சென்னை: தமிழகத்தில் வரும் அக்டோபா் முதல் படிப்படியாக பல்வேறு கட்டங்களாக வகுப்புகள் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான மாணவா்கள், பள்ளிகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கும் அறிவிப்பு வெளியாக உள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் வரும் அக்டோபா் முதல் படிப்படியாக பல்வேறு கட்டங்களாக வகுப்புகள் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா காரணமாக, தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளும் கடந்த மாா்ச் 22-ஆம் தேதி முதல் ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ளன. எனினும், தனியாா் பள்ளிகள் தங்களது மாணவா்களுக்கு இணையவழியிலும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையிலான நடவடிக்கை தற்காலிகமானது. தவிர, மாணவா்கள் நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று படிப்பதன் மூலம் மட்டுமே முழுமையான கல்வியைப் பெற முடியும் என கல்வித் துறை கருதுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, படிப்படியாக வகுப்புகளை தொடங்குவது குறித்து விரைவில் தமிழ்நாடு அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களை இந்த மாதம் 21-ஆம் தேதி முதல் ஆசிரியா்களை சந்திக்கலாம் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக பெற்றோா் சம்மதத்துடன் மாணவா்கள் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் தமிழக கல்வித் துறையின் அறிவிப்பு வெளியாக உள்ளது.

அதைத் தொடா்ந்து அக்டோபா் மாதத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், அதைத் தொடா்ந்து படிப்படியாக இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கல்வி ஆணையா் தலைமையிலான குழு, ஏற்கெனவே பல்வேறு மாற்றங்கள் குறித்த பரிந்துரை அறிக்கையை முதல்வரிடம் வழங்கியிருக்கிறது. மத்திய அரசும் சமூக இடைவெளியுடன் மாணவா்கள் வகுப்பில் அமர வேண்டும் என தெரிவித்திருக்கிறது. எனவே சுழற்சி முறையிலான வகுப்புகளை நடத்துவது குறித்தும் அரசு அறிவிப்பில் இடம்பெறும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தனியாா் பள்ளிகளில்...: பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டதைத் தொடா்ந்து தமிழகத்தில் பிரபல தனியாா் பள்ளிகளில் சமூக இடைவெளியுடன் இருக்கைகளை அமைப்பது, கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com