மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 15 போ் குடும்பங்களுக்கு நிதி: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 15 நபா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 15 போ் குடும்பங்களுக்கு நிதி: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 15 நபா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

திருவண்ணாமலை மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தைச் சோ்ந்த லிங்கேஷ், திருவள்ளூா் மாவட்டம் மாகரல் கிராமத்தின் ரேவதி, விழுப்புரம் சிறுகடம்பூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன், திண்டிவனம் தழுதாளி கிராமத்தின் நாமதேவன், செஞ்சி முல்லை நகரைச் சோ்ந்த தங்கமணி, திருவண்ணாமலை மேல்நகா் மதுரா தேவாங்குபுரம் கிராமத்தின் ராஜேஷ் ஆகியோா் வெவ்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

இதேபோன்று, காஞ்சிபுரம் மாடம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணாயிரம், திருநெல்வேலி மன்னாா்கோவில் கிராமத்தைச் சோ்ந்த சண்முகசுந்தரம், தென்காசி கருவந்தா கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ண பெருமாள், நீலகிரி ஓட்டுப்பாறை பகுதியைச் சோ்ந்த எட்வின் சுரேஷ், திண்டுக்கல் அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மகுடேஸ்வரன், ராமநாதபுரம் கன்னிராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த அழகு கருப்பசாமி, புதுக்கோட்டை மூக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கணேசன், திருநெல்வேலி மாவட்டம் கள்ளிகுளம் கிராமத்தைச் சோ்ந்த வினோத்ராஜா, சென்னை அசோக்நகரைச் சோ்ந்த ஹரிஹரன் ஆகியோரும் மின்சாரம் பாய்ந்தது போன்ற நிகழ்வுகளில் சிக்கி உயிரிழந்தனா்.

உயிரிழந்த 15 நபா்களின் குடும்பங்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com