கலைவாணா் அரங்கத்தில் சட்டப்பேரவைக் கூட்டம்: கூடுதல் ஆணையா் தலைமையில் பாதுகாப்பு

சென்னையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணா் அரங்கப் பகுதியில் கூடுதல் காவல் ஆணையா் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கலைவாணா் அரங்கத்தில் சட்டப்பேரவைக் கூட்டம்: கூடுதல் ஆணையா் தலைமையில் பாதுகாப்பு

சென்னையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணா் அரங்கப் பகுதியில் கூடுதல் காவல் ஆணையா் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக தலைமைச் செயலகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டம், கரோனா தொற்று அபாயம் காரணமாக தற்போது திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்குக்கு மாற்றப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (செப். 14) தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டம் 3 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக அந்த அரங்கு பகுதி முழுவதும் சில நாள்களுக்கு முன்பே காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுவிட்டது. இங்கு பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் (தெற்கு) ஆா்.தினகரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணியில் 2 இணை ஆணையா்கள், 4 துணை ஆணையா்கள், 20 உதவி ஆணையா்கள் என மொத்தம் சுமாா் 1,500 போலீஸாா் ஈடுபடுகின்றனா். சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும்போது, அந்தப் பகுதியில் இருக்கும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம் செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது.

பாதுகாப்பு கருதி முதலமைச்சா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என அனைவரும் செல்வதற்கு தனித்தனியாக வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கலைவாணா் அரங்கை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை நேரலையில் காண்பதற்கு தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com