எண்ணெய்க் கிணறுகளுக்கு அனுமதி: ராமதாஸ் கண்டனம்

காவிரி பாசன மாவட்டங்களில் 8 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
எண்ணெய்க் கிணறுகளுக்கு அனுமதி: ராமதாஸ் கண்டனம்

காவிரி பாசன மாவட்டங்களில் 8 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி பாசனப் பகுதியில் 24 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுனா் குழு கடந்த 2013-ஆம் ஆண்டில் அனுமதி அளித்தது. அவற்றில் 16 எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 8 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அந்த கிணறுகளை அமைப்பதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி விரைவில் காலாவதியாகவுள்ளது. அதை நீட்டித்து வழங்கும்படி ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்திருந்தது. அதையேற்று 8 எண்ணெய்க் கிணறுகள் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை 2023-ஆம் வரை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 5-ஆம் தேதி ஆணையிட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த எந்த விதிகளையும் மதிக்காமல், ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய எண்ணெய்க் கிணறுகளை அமைக்க முயல்வதும், அதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் துணை போவதும் உழவா்களுக்கு இழைக்கப்படும் மன்னிக்க முடியாத துரோகங்களாகும்.

எனவே, காவிரிப் பாசன மாவட்டங்களில் 8 எண்ணெய்க் கிணறுகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து வழங்கப்பட்ட ஆணையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com