காரைக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா

காரைக்குடியில் அண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவச் சிலைக்கு தி.க, திமுக, அதிமுக மற்றும் அமைப்பினர் சார்பில் மரியாதை செலுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  
காரைக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா
காரைக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவச் சிலைக்கு தி.க, திமுக, அதிமுக மற்றும் அமைப்பினர் சார்பில் செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  

திமுக சார்பில் தமிழக முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் தலைமையில் நகர் திமுக செயலாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ சுப. துரைராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, கோட்டையூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் கேஆர். ஆனந்தன் மற்றும் கட்சியினரும், அதிமுக சார்பில் நகரச் செயலாளர் சோ. மெய்யப்பன் தலைமையில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினரும், திராவிடர் கழகம் சார்பில் மண்டல தலைவர் சாமி. திராவிட மணி தலைமையில் கட்சியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.       

மேலும் காரைக்குடி அண்ணா தமிழ்க் கழகம் சார்பில் அதன் செயலாளர் அ. கதிர்வேல் தலைமையில் அந்த அமைப்பினர் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com