விருதுநகர் மேற்கு மாவட்ட அமமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு மேற்கு மாவட்ட அவைத் தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். நகரச் செயலாளர் காமாட்சி, அம்மா பேரவை செயலாளர் சந்தோஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் வேலுச்சாமி அழகர்சாமி ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கு மாவட்டச் செயலாளர் காளிமுத்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.