ஆத்தூரில் கரோனா விழிப்புணர்வு யாத்திரை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு யாத்திரை செவ்வாய்க்கிழமை வந்தது.
Corona Awareness Campaign Pilgrimage in Attur
Corona Awareness Campaign Pilgrimage in Attur

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு யாத்திரை செவ்வாய்க்கிழமை வந்தது.

மதுரையிலிருந்து கோவை வரை கடந்த மாதம் 24.8.2020 மதுரையில் தொடங்கிய மதுரையைச்சேர்ந்த கருப்பையா,சித்ரா தம்பதியினர் நடந்தே புறப்பட்டனர்.

மதுரையில் புறப்பட்டவர்கள் கரோனா வைரஸ் பற்றிய மருத்துவ விழிப்புணர்வு துண்டு பிரசார பிரதிகள் வழங்கி வரும் இவர்கள் செவ்வாய்க்கிழமை ஆத்தூர் வந்தனர். அவர்களைத் தொழிலதிபர்கள் கே.டி.திருப்பதிராஜா, அபிஷேக் பங்கஜ்ராஜ்வீர், காந்தி ஆசிரம அலுவலர் அ.அரசு மற்றும் ஊழியர்கள் ஆகியோர் வரவேற்று உபசரித்தனர். 

இதனையடுத்து ஆத்தூர் நகராட்சி பகுதிகளில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள். சுமார் 650 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு செல்கின்றனர். செல்லும் இடமெல்லாம் இவர்களுக்கு உற்சாக அழைப்பு தருவதாகவும், அனைவரும் ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்தனர். இதனால் தமிழகத்தில் கரோனா முற்றிலும் ஒழிக்கப்படும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com