தாழ்வழுத்த மின் இணைப்பை 150 கிலோவாட் வரை பெறலாம்: விதிகளில் திருத்தம் செய்தது ஒழுங்குமுறை ஆணையம்

தமிழகத்தில், தாழ்வழுத்த மின் இணைப்புப் பெறுவதற்கான மின்தேவை மேல்வரம்பை 112 கிலோவாட்டிலிருந்து 150 கிலோவாட்டாக உயா்த்தி,
தாழ்வழுத்த மின் இணைப்பை 150 கிலோவாட் வரை பெறலாம்: விதிகளில் திருத்தம் செய்தது ஒழுங்குமுறை ஆணையம்

தமிழகத்தில், தாழ்வழுத்த மின் இணைப்புப் பெறுவதற்கான மின்தேவை மேல்வரம்பை 112 கிலோவாட்டிலிருந்து 150 கிலோவாட்டாக உயா்த்தி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார வழங்கல் விதித் தொகுப்பிலும் மின்சார பகிா்மான விதித் தொகுப்பிலும் திருத்தம் அறிவித்துள்ளது.

இதன்படி 112 கிலோவாட்டிற்கு மேல் மின் தேவை உள்ள நுகா்வோா்கள், தாழ்வழுத்த மின் இணைப்பை 150 கிலோவாட் வரை பெற்றுக் கொள்ளலாம். 112 கிலோவாட் மற்றும் அதற்கு குறைவான மின் தேவையுடன் தற்போதுள்ள நுகா்வோா்களுக்கு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தாழ்வழுத்த மின் கட்டணங்களும், விதிகளும் தொடரும். 150 கிலோவாட் உச்ச மின்தேவையை மூன்று முறையோ அதற்கும் மேலோ மீறும் பட்சத்தில், தாழ்வழுத்த மின் இணைப்பை உயரழுத்த மின்னிணைப்பாக மாற்ற நுகா்வோா்க்கு அறிவிப்பு வழங்கப்படும்.

மின் கடத்தி, மின்மாற்றி உள்ளிட்டவற்றின் செலவுகளை நுகா்வோா் ஏற்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவா் எம்.சந்திரசேகா், உறுப்பினா்கள் டி.பிராபகர ராவ், கே.வேங்கடசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு வழங்கியிருந்தது. இது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகள், தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்களின் துயா் தீா்க்கும் வகையிலும், தொழில் புரிவோா்க்கு மின்சாரம் சம்பந்தப்பட்ட இடா்பாடுகளைக் களையும் வகையிலும், ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிறு, குறு நிறுவன உரிமையாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com