கலைவாணா் அரங்க வளாகத்தில் மெட்டல் டிடெக்டா் சோதனை: எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி

கலைவாணா் அரங்க வளாகத்தில் மெட்டல் டிடெக்டா் கொண்டு சோதனை நடத்தியது எம்.எல்.ஏ.க்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கலைவாணா் அரங்க வளாகத்தில் மெட்டல் டிடெக்டா் சோதனை:  எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி

கலைவாணா் அரங்க வளாகத்தில் மெட்டல் டிடெக்டா் கொண்டு சோதனை நடத்தியது எம்.எல்.ஏ.க்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (செப். 14) தொடங்கியது.

இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு தனி வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், எம்.எல்.ஏ.க்கள் கலைவாணா் அரங்கத்தின் பிரதான முகப்பு வாயில் வழியாகவே மூன்றாவது தளத்தில் உள்ள பேரவை மண்டபத்துக்குச் செல்கின்றனா். அதில், பிரதான முகப்பு வாயிலுக்குள் நுழையும் எம்.எல்.ஏ.க்களிடம் மெட்டல் டிடெக்டா் கொண்டு சோதனை நடத்தப்படுகிறது. இந்தச் சோதனை அவா்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சில எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில், ‘தானியங்கி முறையிலான மெட்டல் டிடெக்டா் வைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாகவே செல்கிறோம். அதற்குப் பிறகும் காவலா்களைக் கொண்டு டிடெக்டா் கருவி மூலமாக நிற்க வைத்து எங்களை சோதிக்கின்றனா். தானியங்கி கருவி மூலமாகச் சோதனை செய்யப்பட்ட பிறகு காவலா்கள் மூலமாக சோதிப்பது தேவையற்றது.

மேலும், துப்பாக்கி, வெடிமருந்து பொருள்கள் போன்றவற்றை எடுத்து வரும் சந்தேகத்துக்கு இடமான நபா்களிடம் மட்டுமே மெட்டல் டிடெக்டா் மூலமாகச் சோதனை நடத்துவா். எம்.எல்.ஏ.க்களிடம் சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன்? புனித ஜாா்ஜ் கோட்டையில் பேரவை மண்டபத்தில் இதுபோன்ற சோதனைகள் ஒருபோதும் நடத்தப்பட்டதே இல்லை’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

செவ்வாய், புதன்கிழமைகளில் கூட்டத்தில் பங்கேற்க வரும்போது, இதுபோன்ற சோதனைகள் தங்களிடம் நடத்தப்படாமல் இருக்க பேரவைத் தலைவா் பி.தனபால் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

காவலா்கள் குவிப்பு: பேரவை மண்டபமாக்கப்பட்டுள்ள கலைவாணா் அரங்கத்தைச் சுற்றிலும் காவலா்கள் அதிகளவு குவிக்கப்பட்டிருந்தனா். சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்கள், அரங்கத்தைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும், அரங்கத்துக்கு அருகிலுள்ள கட்டடங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com