இடுக்கி அருகே கேரள அரசு நடத்தும் சலூன்கடை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவடா பஞ்சாயத்தில் உள்ள சலூன் கடைகளில் ஒரு குறிப்பிட்ட தலித் சமுதாயத்திற்கு முடிவெட்ட மறுப்பதால், அரசே சலூன் கடையை ஞாயிற்றுக்கிழமை திறந்துள்ளது.
கேரள மாநில இடுக்கி மாவட்ட பார்பர் ஷாப் கடை (கோப்பு படம்)
கேரள மாநில இடுக்கி மாவட்ட பார்பர் ஷாப் கடை (கோப்பு படம்)


கம்பம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவடா பஞ்சாயத்தில் உள்ள சலூன் கடைகளில் ஒரு குறிப்பிட்ட தலித் சமுதாயத்திற்கு முடிவெட்ட மறுப்பதால், அரசே சலூன் கடையை ஞாயிற்றுக்கிழமை திறந்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவடா பஞ்சாயத்தில் உள்ள சலூன்  கடைகளில் ஒரு குறிப்பிட்ட   தலித்துகளுக்கு முடிவெட்ட மறுத்துள்ளனர். இது பற்றிய புகார்கள் கேரள அரசுக்கு சென்றது. 

முன்னதாக, வட்டவடா  பஞ்சாயத்தில் ரூபாய் 10 லட்சம் செலவில் வணிக வளாகம் கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு கடையை அரசு சார்பில் சலூன் கடை அமைக்கப்பட்டு, தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் திறந்து வைத்தார். அப்போது 13 பேர் வாடிக்கையாளர்கள் இருந்தனர். அதில் 8 பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், 5 பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அருந்ததியின சமுதாயத்தவர்கள்.

வட்டவடா பஞ்சாயத்து தலைவர் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த ராமராஜ் கூறியது, தலித்துகளுக்கு முடிவெட்ட மறுத்ததாக, புகார்கள் வந்தது. இதை விசாரித்து அந்த  சலூன் கடைக்காரர்களுக்கு பஞ்சாயத்து சார்பில் வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது, பஞ்சாயத்து சார்பில் கோவிலூர் பகுதியில் சலூன்கடை திறக்கப்பட்டுள்ளது. இதர சலூன்கடைக்காரர்கள் வாங்கும் கட்டணமே வாங்கப்படும், பேதமில்லாமல் அனைவருக்கும் முடி வெட்டப்படும் என்றார். இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com